உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவில் நுாபுர கங்கையில் புனித நீராடல்

அழகர்கோவில் நுாபுர கங்கையில் புனித நீராடல்

அலங்காநல்லுார்: ஆடி அமாவாசையை முன்னிட்டு, அழகர்கோவில் மூலவர் சுந்தரராஜ பெருமாளுக்கும், தேவியர்களுக்கும் தைல பிரதிஷ்டை முடிந்து கவசங்கள் சாத்தப்பட்டு சர்வ அலங்காரத்தில் விஸ்வரூப தரிசனத்தில் அருள் பாலித்தனர்.

நுாபுரகங்கையில் பக்தர்கள் அதிகாலையிலிருந்து மாலை வரை புனித நீராடி அங்குள்ள ராக்காயி அம்மனை விளக்கேற்றி தரிசித்தனர். மேலும்சோலைமலை முருகன் கோயிலில் வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணியசாமிக்கும், வித்தக விநாயகர் மற்றும் ஆதிவேல் சன்னதிகளிலும் அபிஷேகம் நடந்தது. காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதியிலும் பக்தர்கள் சந்தன சாத்துப்படி செய்து மாலைகள் காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !