உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

தியாகதுருகம்: சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.

தியாகதுருகம் அடுத்த சித்தலூர் மணிமுக்தா ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.  கருவறையில் உள்ள பிரம்மாண்ட புற்றுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பெண்கள் பொங்கலிட்டு, மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு உற்சவர் அம்மன் சிலை அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !