மழை வேண்டி மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன்
ADDED :2276 days ago
மேலுார்: மேலுார் கல்லம்பட்டி ஒரு பகுதியைச் சேர்ந்த மக்கள் செங்குண்டு கண்மாய் அய்யனார் கோயிலில் சுடும் பாறையில் வெறும் தரையில் பச்சரிசி சோறு, நாட்டுக்கோழி குழம்புடன் சுவாமிக்கு படையிலிட்டனர். பின்னர் அனைவரும் மழை வேண்டி மண் சோறு சாப்பிட்டனர். ஊர் திரும்புவதற்குள் மழை பெய்யும் என்ற ஐதீகத்தின் படி நேற்று மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.