உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் முதல் வன பூஜை துவக்கம

அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் முதல் வன பூஜை துவக்கம

அந்தியூர்: அந்தியூரில், புகழ்பெற்ற குருநாதசாமி கோவிலில் முதல் வன பூஜை  நேற்று (ஜூலை., 31ல்) நடந்தது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையத்தில் புகழ் பெற்ற, குருநாதசாமி கோவில் பண்டிகை ஆண்டுதோறும் ஆடி மாதம், ஆடி பெரும் தேர் திருவிழாவாக நடைபெறுவது வழக்கம்.

இந்தாண்டு கடந்த, 17 ல், பூச்சாட்டுதலுடன் பண்டிகை துவங்கியது. 24ல், கொடியேற்றுதல் நடந்தது. நேற்று (ஜூலை., 31ல்) காலை, புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து, மூன்று தேர்களில் காமாட்சி அம்மன், பெருமாள்சாமி, குருநாதசாமி ஆகிய மூன்று சுவாமிகள் வனக் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிறப்பு பூஜை நடந்தது. இன்று (ஆக., 1ல்)  அதி காலை வனக்கோவிலிலிருந்து தேர்கள் புதுப்பாளையம் கோவிலுக்கு வந்து  சேரும். முதல் வன பூஜைக்கு தேர்களை எடுத்துச் செல்லும்போது, பெண்கள்  தேர்களின் முன் விழுந்து தங்களது வேண்டுதலை கூறி வணங்கி செல்வர். வரும்,  7ல் தேர்த்திருவிழா நடக்கிறது. 10 வரை பண்டிகை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !