உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோட்டில் ஆடி அமாவாசையை முன்னிட்டு காவிரியில் வழிபாடு

ஈரோட்டில் ஆடி அமாவாசையை முன்னிட்டு காவிரியில் வழிபாடு

ஈரோடு: ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை,  கொடுமுடி காவிரி ஆறு, பவானிசாகர் அணைப்பகுதி, ஈரோடு கருங்கல்பாளையம்  காவிரி ஆறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமானவர்கள், புனித நீராடினர்.  

நீர் நிலைகளை ஒட்டி உள்ள சிவாலயங்களிலும், பிற கோவில்களிலும் வழிபாடு  செய்தனர். நீர் நிலைகளில் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம்  கொடுத்தனர். ஈரோடு, வெண்டி பாளையம் மின் கதவணை திட்டத்தில் தண்ணீர்  தேக்கி உள்ளதால், ஈரோடு, கருங்கல் பாளையம் காவிரி ஆற்றில் அதிகமாக நீர்  தேங்கி உள்ளது. அங்கு, ஏராளமான வர்கள், புனித நீராடி, தங்களது  முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து, ஆற்றில் இறங்கி வழிபாடு செய்தனர்.  

காவிரி ஆற்றின் அருகே உள்ள சோழீஸ்வரர் கோவிலுக்கு சென்று, வழிபாடு  செய்தனர். அப்பகுதியில் கூடி இருந்த பலருக்கும், தங்கள் முன்னோர் நினைவாக  உணவு பொட்டலங் கள், பணம், பழங்களை வழங்கினர். அங்கு அழைத்து  வரப்பட்டிருந்த பசுக்களுக்கு, கீரை வகைகள், காய்கறி, பழங்களை உணவாக  வழங்கினர். கடந்த இரண்டு ஆண்டுகளாக, காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக  இருப்பதால், வழக்கத்தைவிட கூடுதலானவர்கள் புனித நீராடி, ஆடி அமாவாசை  வழிபாட்டில் பங்கேற்றனர்.

* பவானி கூடுதுறையில், குறைவான தண்ணீர் இருந்தது. இதனால் பூஜையில்  ஈடுபட்டவர்கள் தர்ப்பணம் செய்த பொருட்களை, தண்ணீரில் விட்டு புனித நீராடி  வழிபாட்டில் ஈடுபடுவதில் சிரமம் ஏற்பட்டது. ஏராளமானோர் முன்னோர்களுக்கு  திதி கொடுத்தனர்.

* கொடுமுடி, மகுடேஸ்வரர் கோவில் முன்புள்ள ஆற்றங்கரையில், நேற்று  31ல், ஏராளமான பக்தர்கள் குளித்து விட்டு கோவிலுக்கு சென்றனர். கூட்டம் அதிகமாக  இருந்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

* கோபி, பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவிலில், ஏராளமான பக்தர்கள்  நேற்று (ஜூø., 31ல்) குவிந்தனர். அம்மன் சன்னதி எதிரேயுள்ள, 60 அடி குண்டத்தில், பெண் பக்தர்கள் தீப மேற்றி வழிபட்டனர். இதேபோல், கோபி சாரதா மாரியம்மன் கோவில், மொடச்சூர் தான் தோன்றியம்மன் கோவில்களில் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. தவிர, பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

* புன்செய்புளியம்பட்டி, மாரியம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு  பூஜை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல், ஊத்துக்குளியம்மன்,  பிளேக் மாரியம்மன், காமாட்சியம்மன், சவுடேஸ்வரியம்மன், ஆதிபராசக்தியம்மன்  உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

* பவானிசாகர், டணாய்க்கன் கோட்டை கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது.  அண்ணாநகர், கதிர் பெருமாள் கோவிலில், பெருமாள், தங்க கவசத்தில்  பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

* சிவன்மலை சுப்பிர மணியசாமி கோவிலில் நேற்று காலை, 5:30 மணிக்கு  கோவில் நடை திறக்கப்பட்டு, முதல் பூஜையாக கோமாதா பூஜை நடந்தது, 6:30  மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடந்தது. மாலை சிவன்மலை  முருகரான சிவாச்சலபதியும், வள்ளி, தெய்வானையும் அலங்கரிக்கப்பட்ட தங்க  ரதத்தில், மலையை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

* தாராபுரம், அமராவதி ஆற்றில் நீராடிய பொது மக்கள், கரையில் அமர்ந்து  இருந்த புரோகிதர் களிடம் தங்களது, முன்னோர்களுக்காக ஹோமங்கள் மற்றும்  தர்ப்பண பூஜைகளை செய்த னர். பித்ருக்களுக்கான பிண்டங்களை வைத்து, எள்  மற்றும் நீரை ஊற்றிய பின், ஆற்றில் பிண்டங்களை கரைத்து பித்ருசாந்தி  செய்தனர். பின், சூரியனை வணங்கி முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய  கடமையை நிறைவு செய்தனர்.

* தாராபுரம் அகத்தீஸ்வரர் ஆலயத்தில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்த னர். இதே போல், தில்லாபுரி அம்மன் கோவில், மாரியம்மன்  கோவில் உள்ளிட்ட நகரின் பல கோவில்களில், மக்கள் வரிசையில் நின்று  சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !