உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரியில் ஆடி அமாவாசையில் முத்துமாரியம்மன் நகர்வலம்

கிருஷ்ணகிரியில் ஆடி அமாவாசையில் முத்துமாரியம்மன் நகர்வலம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ஜோதிவிநாயகர் கோவில் தெருவில்  உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், நேற்று (ஜூலை., 31ல்) ஆடி அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.

பின்னர், அம்மன் பெரியபாளையத்தம்மன் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு உற்சவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக, நகர்வலம் கொண்டு செல்லப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !