தர்மபுரி வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
தர்மபுரி: முத்தம்பட்டி வீரஆஞ்சநேயர் கோவிலில், ஆடி அமாவாசையையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தன. ஆஞ்சநேயருக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், தொப்பூர் மன்றோக்குளக்கரை ஆஞ்சநேயர் கோவில், தர்மபுரி ஹரிஹரநாதர் தெரு ஆஞ்சநேயர் கோவில், பாலக்கோட்டில் உள்ள வீரதீர ஆஞ்சநேயர் கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆடி அமாவாசையை முன்னிட்டு, தர்மபுரி எஸ்.வி.ரோடு அங்காளம்மன் கோவிலில், கோ பூஜை நடந்தது. தொடர்ந்து, 108 பால் குடம் ஊர்வலம், பாலாபிஷேகம் நடந்தன.
இதேபோல், வெளிப்பேட்டைதெரு அங்காளம்மன் கோவில், உட்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தர்மபுரி அடுத்த மொடக்கோரி சிவசக்தி சித்தர் பீடத்தில் நேற்று (ஆக., 1ல்), ஆடி அமாவாசையை முன்னிட்டு திரளான பக்தர்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் மற்றும் தேர்த் திருவிழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.