ஈரோடு குருநாதசுவாமி கோவில் விழா: சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED :2287 days ago
ஈரோடு: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே, குருநாதசுவாமி கோவில் தேர்த்திருவிழா வரும், 7 முதல், 11 வரை நடக்க உள்ளது. ஈரோடு மற்றும் சுற்றுப்பகுதிகளான கோபி, சத்தி, நம்பியூர், கவுந்தப்பாடி, பவானி பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், விழாவில் பங்கேற்பர். இவர்களின் வசதிக்காக, விழா நடக்கும் ஐந்து நாட்களுக்கும், ஈரோடு மண்டல அரசு போக்கு வரத்து கழகம் சார்பில், ஈரோடு, கோபி, கவுந்தப்பாடி, பவானி, குருவரெட்டியூர், சத்தி, பர்கூர், வெள்ளித்திருப்பூர், எண்ணமங்கலம், மேட்டூர் அம்மாபேட்டை ஊர்களில் இருந்து, சிறப்பு பஸ் இயக்கப்படவுள்ளது. பயணம் தொடர்பான உதவிக்கு, முக்கிய பஸ் நிறுத்தங்கள், குருநாத சுவாமி கோவில் அருகிலுள்ள அலுவலகம், பந்தல் மற்றும் தேவையான இடங்களில், சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.