ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் சயனசேவை
ADDED :2273 days ago
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உற்ஸவத்தின் ஏழாம் நாளில் நடந்த சயனசேவை உற்ஸவத்தில் பல ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசித்தனர்.
இதைமுன்னிட்டு நேற்று மாலை கோயிலிலிருந்து புறப்பட்ட ஆண்டாள், ரெங்கமன்னார் மாடவீதி மற்றும் ரதவீதிகள் வழியாக கிருஷ்ணன்கோயிலில் எழுந்தருளினர். அங்கு ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னார் சயனத்திருக்கோலம் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது. பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசித்தனர். தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் கோயில்பட்டர்கள் ஸ்ரீவாரிமுத்து, வாசுதேவன், ரகு, பாலாஜி,தேவராஜ், வேதபிரான் அனந்தராமன், சுதர்சன், அரையர் முகுந்தன்,வெங்கடஷே், ஸ்தானிகம் கிருஷ்ணன், ரமஷே், மணியம் கோபி மற்றும் ஸ்ரீராம் பங்கேற்றனர்.