உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் மீது நடந்து அருள்வாக்கு

முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் மீது நடந்து அருள்வாக்கு

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, இலக்கியம்பட்டி பஞ்., அலகாபுரி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் மீது ஏறி நடந்து சென்று, பூசாரி அருள்வாக்கு கூறினார்.

இக்கோவிலின் நான்காம் ஆண்டு விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. கணபதி, லட்சுமி, நவகிரகங்கள் மற்றும் முத்து மாரியம்மனுக்கு ஹோமங்கள் நடந்தன. நேற்று காலை, 7:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம், தீபாராதணை நடந்தது. 9:00 மணிக்கு, அம்மன் வீதிஉலா நடந்தது. அப்போது, தரையில் பக்தர்கள் படுத்துக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இக்கோவில் பூசாரி, அவர்கள் மீது ஏறி நடந்து சென்று அவர்களுக்கு அருள்வாக்கு கூறினார். பகல், 1:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தல், 2:00 மணிக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !