மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் ஆடித்தபசு விழா ஆரம்பம்
ADDED :2341 days ago
மானாமதுரை : சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி- சோமநாதர் கோவில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று காலை 9:45 மணிக்கு ஆனந்தவல்லி அம்மன் சர்வ அலங்காரத்துடன் கொடி மரத்திற்கு முன் எழுந்தருளினார்.பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது. கொடி மரத்திற்கு பல்வேறு பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிவுலா நடைபெறும். ஆடித்தபசு வரும் ஆக.11 ந் தேதி நடக்கிறது. 12 ந் தேதி சந்தனக்காப்பு உற்ஸவத்துடன் விழா நிறைவு பெறும்.ஏற்பாடுகளை ஸ்தானீகர் அழகிய சுந்தரபட்டர்,தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் சரவணன் செய்து வருகின்றனர்.