உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் பொன்னியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்

மயிலம் பொன்னியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்

மயிலம்: வீடூர் பொன்னியம்மன் கோவிலில் முன்றாம் ஆடி வெள்ளி உற்சவம்  நடந்தது.மயிலம் அடுத்த வீடூர் அணை அருகே உள்ள பொன்னியம்மன்  கோவிலில் ஆடி வெள்ளி உற்சவம் நடந்தது. முன்றாம் வெள்ளியை முன்னிட்டு  காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது.

பின்னர் வீடூர் குளக்கரையிலிருந்து பக்தர்கள் பூங்கரகத்தை முக்கிய வீதிகள் வழியாகஎடுத்து வந்தனர். பக்தர்கள் அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்திக் கடன்  செலுத்தினர். மதியம் 1:00 மணிக்கு கோவில் வளாகத்தில் சாகை வார்த்தல்  நடந்தது.மாலை 4:00 மணிக்கு கிராம பெண்கள் பொங்க லிட்டு அம்மனுக்கு  படைத்தனர். 6:00 மணிக்கு பால், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட நறு மணப்  பொருட்களினால் அபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள்  சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !