உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா

மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா

 மேல்மருவத்துார்: ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆடிப்பூர விழாவில், சுயம்பு அம்மனுக்கு பாலாபிஷேகத்தை, பங்காரு அடிகளார், நேற்று, துவக்கி வைத்தார். மேல்மருவத்துார், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆதிபராசக்தி அம்மன் கோவிலில், இந்த ஆண்டு, ஆடிப்பூர விழாவையொட்டி, 2ம் தேதி, ஆடி அமாவாசையன்று, சிறப்பு வேள்வி பூஜையும், நேற்று முன்தினம், கலச விளக்கு வேள்வி பூஜையும் நடைபெற்றது.

அதன்பின், 48வது ஆடிப்பூர விழா, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பங்காரு அடிகளார் வீட்டிலிருந்து, தாய் வீட்டு கஞ்சியை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர், லட்சுமி பங்காரு அடிகளார், கோவிலுக்கு எடுத்து வந்து, கருவறை அம்மனுக்கு படைத்தார். கஞ்சி வார்த்தல் விழாவை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். கஞ்சி தயாரிக்கும் பணியில், காஞ்சிபுரம், ராமநாதபுரம், சிவங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் செய்திருந்தனர்.அதன்பின், கேசவராயன்பேட்டை வளாகத்திலிருந்து, 3 கி.மீ., துாரம் பக்தர்கள் கஞ்சி கலயங்கள் சுமந்து வந்தர்களை, காலை, 6:00 மணிக்கு, கோவிலுக்குள் அனுமதித்தனர். அதைத் தொடர்ந்து, காலை, 11:30 மணிக்கு, சுயம்பு அம்மனுக்கு பாலாபிஷேகத்தை, பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார்.

இதில், சென்னை, உயர் நீதிமன்ற நீதிபதி டிக்காராமன், மற்றும் நீதிபதிகள், மத்திய பாதுகாப்புபடை அதிகாரி மல்லிகா உட்பட, பலர் பங்கேற்றனர். இன்று, பாலாபிஷேக விழா நடைபெறுகிறது.தமிழகம் மட்டும் இன்றி, பல்வேறு, இடங்களிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம், கோயம்புத்துார், திருப்பூர் ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், சித்தர் சக்தி பீடத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !