ஸ்ரீவி ஆண்டாள் திருக்கல்யாண உற்ஸவம்: நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பம்!
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவ கொடியேற்ற விழா நாளை(28ம் தேதி) நடக்கிறது. ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திரத்தை யொட்டி ஆண்டாள், ரெங்க மன்னார் திருக்கல்யாண உற்சவம் நடக்கும். இவ்விழா நாளை காலை 9.30மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று மாலை இரட்டை தோளுக்கினியானில் ஆண்டாள் ரெங்கமன்னார் புறப்பாடு நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான ஏப்.4ம் தேதி பூரம் நட்சத்திரத்தையொட்டி தேரில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளல் நடக்கிறது. ஏப்.5 காலையில் தேரோட்டமும், ரேணுகா தேவி கோயிலில் திருக்கல்யாண பட்டு, புடவை, வேஷ்டி, திருமாங்கல்யம் பெறுதல், இரவு 7 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. 9ம் தேதி புஷ்ப யாகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் குருநாதன் செய்து வருகின்றனர்.