உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழக்கரை சொக்கநாதர் கோயிலில் சுமங்கலி பூஜை

கீழக்கரை சொக்கநாதர் கோயிலில் சுமங்கலி பூஜை

கீழக்கரை:கீழக்கரையில் உள்ள மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயிலில் சுமங்கலி பூஜை கோலாகலமாக நடந்தது. மூலவர்களுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. மீனாட்சியம்பிகைக்கு கண்ணாடி வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு, வளைகாப்பு நடந்தது. 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே சமயத்தில் அமர்ந்து சக்தி ஸ்தோத்திரம், சகஸ்ரநாம அர்ச்சனை, சுமங்கலி பூஜைகளை செய்தனர். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !