உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அந்தியூர் அருகே, குருநாதசுவாமி கோவில் பண்டிகை: ராட்டினம், கடைகள் அமைக்கும் பணி தீவிரம்

அந்தியூர் அருகே, குருநாதசுவாமி கோவில் பண்டிகை: ராட்டினம், கடைகள் அமைக்கும் பணி தீவிரம்

அந்தியூர்: அந்தியூர் அருகே, புதுப்பாளையம், குருநாதசுவாமி கோவில் பண்டிகை, வரும், 7ம் தேதி தொடங்குகிறது. தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கோவில் விழா என்பதால், லட்சக்கணக் கான பக்தர்கள் இதில் கலந்து கொள்வர். இதை முன்னிட்டு, அந்தியூர் - பர்கூர் சாலையில், வெள்ளைப்பிள்ளையார் கோவிலில் இருந்து வனக்கோவில் பிரிவு வரை, சாலையின் இருபுற மும் கடைகள் அமைக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. வனக்கோவில் பிரிவு மற்றும் கால்நடை சந்தை நடக்கும் இடங்களில், உயர் ரக ராட்டினங்கள் அமைக்கும் பணியும் தொடங்கி யுள்ளது. இரு நாட்களே உள்ளதால், பொழுது போக்கு அம்சங்களாக, பல்வேறு விளையாட்டு உபகரணங்களும் வந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !