கோத்தகிரி ஒன்னதலை பஜனை குழுவினர், பழநிக்கு பாத யாத்திரை
ADDED :2299 days ago
கோத்தகிரி: கோத்தகிரி ஒன்னதலை பஜனை குழுவினர், நேற்று (ஆக., 4ல்) பழநி முருகன் கோவி லுக்கு பாதயாத்திரை சென்றனர்.நீலகிரி மாவட்டத்தில் இருந்து, 50க்கும் மேற்பட்ட பஜனை குழுவினர், ஆண்டுதோறும் ஆடி மாதம் பழநி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து செல்கி ன்றனர்.
இதில், ஒன்னதலை பஜனைக் குழுவினர் நேற்று (ஆக., 4ல்) பழநிக்கு பாத யாத்திரைக்கு புறப் பட்டனர்.கிராமத்தில் சித்தி விநாயகர் கோவில் மற்றும் ஹெத்தையம்மன் கோவில்களில், காணிக்கை செலுத்தி, பஜனையில் ஈடுபட்டு, பழநிக்கு புறப்பட்டனர்.கோத்தகிரி, மேட்டுப்பாளை யம் வழியாக சென்று, பல்லடம், தாராபுரம் வழியாக பழநிக்கு 9ம் தேதி செல்கின்றனர்.