திண்டுக்கல் முத்தழகுப்பட்டி புனித செபஸ்தியார் ஆலய விழா கொடியேற்றம்
ADDED :2299 days ago
திண்டுக்கல்:திண்டுக்கல் முத்தழகுப்பட்டி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத் துடன் துவங்கியது.
திருவிழாவையொட்டி ஜூலை 28 ல் நவநாள்கள் திருப்பலி துவங்கியது. நேற்று (ஆக.4) ஆலய கொடி மரத்தில் கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் முன்னிலையில் புனித செபஸ்தியாரின் உருவம் பொறித்த திருக்கொடி ஏற்றப்பட்டது.இன்று (ஆக.5) புனிதர்களின் மின் தேர் பவனி, வாண வேடிக்கையுடன் நடக்கிறது.
நாளை (ஆக.6) திருவிழா திருப்பலி, புனிதருக்கு காணிக்கை பவனி, புனிதரின் மன்றாட்டு ஜெபம், வேண்டுதல் பூசை நடக்கிறது. இதைத்தொடர்ந்து இரவு 7:00 மணி முதல் காலை வரை மாபெரும் அன்னதானம் நடக்க உள்ளது.