உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனியில் மழை வேண்டி யாக வேள்வி சித்தர்கள் பங்கேற்பு

தேனியில் மழை வேண்டி யாக வேள்வி சித்தர்கள் பங்கேற்பு

தேனி:குன்னுார் அம்மச்சியாபுரம் ரோட்டில் உள்ள விநாயகர் கோயில் படித்துறையில் சித்தர்கள் மரபு வழி மார்க்கம் மக்கள் பேரவை, இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில், பஞ்சநதி தீர்த்த பூஜையும், 108 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

இதில் குங்கும சித்தர், பசுமை சித்தர், சந்தன சித்தர் ராஜா சுவாமி, சித்தர்கள் மரபு வழி மார்க்கம் மக்கள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சகாதேவன், இந்து ஆலய பாதுகாப்பு இயக்க ஒருங் கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் வேம்பு, வில்வம், ஆலம், அரச மரக் கன்றுகள் 108 நடப்பட்டன. பின், சடையால் கோயிலில் மழை வேண்டி யாக பூஜை நடந்தது. இதில் ஏராளமானோர் பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !