உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குச்சனுார் சனீஸ்வர பகவான் சகடையில் திருவீதி உலா

குச்சனுார் சனீஸ்வர பகவான் சகடையில் திருவீதி உலா

சின்னமனுார்:குச்சனுார் சனீஸ்வரர் சகடையில் திருவீதி உலாவரும் நிகழ்ச்சி வெகு விமர் ச்சையாக நடந்தது. இன்று மாலை 6:00 மணிக்கு லாடசன்னாசி சித்தர் பீடத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இக்கோயிலின் ஆடி சனிவார பெருந்திருவிழா ஜூலை 20 கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று (ஆக., 4ல்) மாலை சகடையில்(மாடு இழுக்கும் தேர்) சுவாமி நகர்வலம் நடந்தது. உடயதார்கள் சார்பில் மண்டகப்படி நடந்தது. ஸ்ரீவி., ராஜபாளையம் சனீஸ்வர பகவான் அன்னதானக்குழுவினர் அன்னதானம் வழங்கினர்.

லாட சன்னாசிசித்தர் பூஜை: பாம்பாட்டி சித்தரின் வழி தோன்றலாக நம்பப்படுபவர் லாட சன்னாசி சித்தர். இவரது பீடம் சனீஸ்வரர் சன்னதியின் இடதுபுறம் அமைந்துள்ளது. மூன்றா வது சனிவார திருவிழா நிறைவடைந்தபின், லாட சன்னாசி சித்தருக்கு சிறப்பு பூஜை கள் நடைபெறும். இந்தாண்டுக்கான சிறப்பு பூஜை இன்று (ஆக., 5ல்) மாலை 6:00 மணிக்கு துவங் குகிறது. முளைப்பாரி, கரகம் சுமந்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்துவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !