நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் விளக்கு பூஜை
ADDED :2299 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் மழைவேண்டி பெண்கள் விளக்கு பூஜை செய்தனர்.
நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருள, 50 க்கும் மேற்பட்ட பெண்கள் மழை வேண்டியும், உலக அமைதிக்காகவும் விளக்கு பூஜை செய்தனர். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார்.