உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடுவீரப்பட்டு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், செடல் திருவிழா..,.

நடுவீரப்பட்டு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், செடல் திருவிழா..,.

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், 2 ம் தேதி ஆடி மாதம் ௩ம் வெள்ளியை முன்னிட்டு செடல் திருவிழா நடந்தது.

விழா கடந்த 25 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 29 ம் தேதி இரவு அம்மன் வீதி உலா வும், 30 ம் தேதி செவ்வாய்கிழமை காலை10:00 மணிக்கு 306 குடம் தண்ணீர் ஊர்வலமாக எடுத்து வந்து அபிஷேகம் நடந்தது. மதியம் 2:00 மணிக்கு சக்தி கரகம் எடுத்து வந்து சாகை வார்த்தல் நடந்தது. 2ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. 9:00 மணிக்கு செடல் திருவிழா நடந்தது. இரவு 7:00 மணிக்கு திருத்தேரில் அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று 3 ம் தேதி சனிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !