வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆடிப்பூர விழா கோலாகலம்
ADDED :2300 days ago
வால்பாறை:வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கொட்டும் மழையில் நடந்த ஆடிப்பூர பெருவிழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்த கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் மகா அருள் நிகும்பலாயாகம் மற்றும் ஆடிப்பூர விழா நேற்று காலை நடந்தது.
விழாவையொட்டி காலை,7:00 மணிக்கு ஸ்ரீலலிதா சகஸ்ரநாமமும், காலை, 9:00 மணிக்கு ஸ்ரீதுர்க்க ஹோமம், நிகும்பலாயாகமும் நடந்தது. அதனை தொடர்ந்து காலை காலை, 11:30 மணிக்கு துர்க்கை அம்மனுக்கும், பிரத்யங்கிராதேவிக்கும் அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தது. கொட்டும் மழையில் நடந்த ஆடிப்பூரவிழாவில் நுாற்றுக்கணக் கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். பக்தர்களுக்கு, மஞ்சள் கயிறு மற்றும் குங்குமம் வழங்கப்பட்டது.