உடுமலை நேரு வீதி காமாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா
ADDED :2300 days ago
உடுமலை: உடுமலை நேரு வீதி காமாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூரவிழா நடந்தது. உடுமலை நேருவீதி காமாட்சி அம்மன் கோவிலில், ஆடி மாத சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. நேற்றுமுன்தினம் (ஆக., 3ல்) ஆடிப்பெருக்கு விழா மற்றும் ஆடிப்பூர விழா நடந்தது.
அம்மனுக்கு பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. சூலத்தேவருடன் வளையல் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நாளை (ஆக., 6ல்) சஷ்டியை முன்னிட்டு, காலை, 10:00 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை, 5:00 மணிக்கு ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம பாராயணமும் நடக்கிறது.வரும் 9ம் தேதி திருவிளக்கு பூஜையும், 16ம் தேதி தம்பதி பூஜையும் நடைபெறுகிறது.