உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிப்பூரம் விழா தேரோட்டம்: சூலூரில் பக்தர்கள் பரவசம்

ஆடிப்பூரம் விழா தேரோட்டம்: சூலூரில் பக்தர்கள் பரவசம்

சூலுார்:ஆடிப்பூரத்தை முன்னிட்டு, கண்ணம்பாளையத்தில் திருக்கல்யாணம்  மற்றும் தேரோட்டம் நடந்தது. சூலுாரை அடுத்த கண்ணம்பாளையம் அரசடி  விநாயகர் மற்றும் மாகாளியம்மன் கோவில் பழமையானது. இங்கு, ஆடிப்பூரத்தை  ஒட்டி, திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் நடப்பது வழக்கம். கடந்த, 1ம் தேதி  காலை எல்லை காவல் தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள்  நடந்தன.

தொடர்ந்து மாலையில், கண்ணம்மையம்மனுக்கு சிறப்பு திருமஞ்சனம்,  தீபாராதனை நடந்தது. மறுநாள், பழனியாண்டவர் காவடி குழுவின் வள்ளி  கும்மியாட்டம் நடந்தது. ஆடிபெருக்கன்று காலை, விநாயகருக்கு சிறப்பு அபிஷேக  அலங்கார பூஜையும், மாகாளியம் மன், பழனியாண்டவருக்கு சிறப்பு திருமஞ்சனம்  செய்விக்கப்பட்டது. பொங்கல் வைத்து பெண்கள் வழிபட்டனர். அம்மன்  திருக்கல்யாணம் நிறைவடைந்து, திருத்தேர் திருவீதி உலா நடந்தது. இதேபோல்,  சூலுார் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள குடலுருவி மாரியம்மன் கோவி லில்,  ஆடிப்பண்டிகையை ஒட்டி, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. இதில்,  ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !