பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கோவில்களில், ஆடிப்பூரத்தில் திருக்கல்யாணம் சிறப்பு பூஜை
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆடிப்பூரத்தை யொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து மாலையில் பெருமாளுக்கும், ஆண்டாள் தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.பொள்ளாச்சி கடைவீதி மாரியம்மன் கோவிலில், ஆடிப்பூரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கரியகாளியம்மன் கோவிலில் இருந்து, பால் குடங்கள் கொண்டு வரப்பட்டு, காலை, 10:30 மணிக்கு அபிேஷகமும், தீபாராதனையும் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு, 7:00 மணிக்கு அம்மன் ஊஞ்சல் உற்வசமும் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆடிப் பூரத்தையொட்டி, தீர்த்தவாரி உற்சவம், மஞ்சள் நீராட்டு மற்றும் சிறப்பு பூஜைகள் நடை பெற்றன. தொடர்ந்து,
மாலை, 5:00 மணிக்கு அம்மனுக்கு வளையல் திருவிழா நடந்தது. பக்தர்கள் வளையல் மாலை, வளையல் தோரணம் அணிவித்து வழிபாடு செய்தனர். சுமங்கலி பெண்களுக்கு வளை யல் பிரசாதமாக வழங்கப்பட்டது. பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலிலும் ஆடிப்பூரத்தை யொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.