உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி அருகே சதுர்த்திக்கு தயாராகும் சிலைகள் பல வடிவங்களில் விநாயகர்!

பொள்ளாச்சி அருகே சதுர்த்திக்கு தயாராகும் சிலைகள் பல வடிவங்களில் விநாயகர்!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே விநாயகர் சதுர்த்தியையொட்டி, காகித  கூழிலான விநாய கர் சிலைகள் விற்பனைக்காக தயார் நிலையில்  உள்ளனவிநாயகர் சதுர்த்தி விழா விமரிசை யாக ஆண்டுதோறும்  கொண்டாடப்படுகிறது. இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில், விநாயகர்  சிலைகள் வைத்து, பூஜை செய்து வழிபாடு செய்வது வழக்கம். இந்தாண்டு  விநாய கர் சதுர்த்தி விழா அடுத்த மாதம், 2ம் தேதி கொண்டாடப்படுகிறது.

விழாவுக்காக தற்போதே, விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக  நடைபெற்று வருகின்றன.பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலாம்பட்டியில், காகித  கூழ் பயன்படுத்தி விநாய கர் சிலைகள் தயாரிப்பு பணிகள் கடந்த சில  மாதங்களாக நடைபெற்றன. சிவன், விநாயகர், முருகன் சிலை, பாம்பு விநாயகர்,  லிங்க விநாயகர், பாகுபலி விநாயகர், ஜல்லிகட்டு விநாயகர் உள்ளிட்ட பல்வேறு  விதமான விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்காக  வைக்கப்பட்டுள்ளன.

சிலை தயாரிப்பாளர் ராமலிங்கம் கூறுகையில், ”காகித கூழ் பயன்படுத்தி  விநாயகர் சிலைகள், ஒரு அடி முதல், 10 அடி வரை சிலை தயாரிக்கப்படுகிறது.  விதம், விதமான விநாயகர் சிலை கள் தயாரித்து, வர்ணம் பூசப்பட்டுள்ளன.  சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், காகிதக் கூழ், கிழங்கு மாவு மற்றும் வாட்டர்  கலர் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிலைகள், 501 ரூபாய் முதல், 40,000 ரூபாய்  வரை விற்கப்படுகிறது. சதுர்த்தி விழா துவங்க ஒரு மாதம் மட்டுமே உள்ள  சூழலில், சிலைகள் தயார் நிலையில் உள்ளன. கடந்தாண்டை விட இந்தாண்டு  விற்பனை நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !