உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணலிபுதுநகர் தேவாலயத்தில் மரக்கன்றுகள் வழங்கி போக்குவரத்து விழிப்புணர்வு

மணலிபுதுநகர் தேவாலயத்தில் மரக்கன்றுகள் வழங்கி போக்குவரத்து விழிப்புணர்வு

மணலிபுதுநகர்:குழந்தை இயேசு தேவாலயத்தில், கிறிஸ்துவ மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி, போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மணலி போக்குவரத்து காவல் துறை சார்பில், மணலிபுதுநகர் குழந்தை இயேசு தேவாலயத்தில், நேற்று முன்தினம் (ஆக., 4ல்) காலை, போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதில், போக்குவரத்து உதவி கமிஷனர், பிரபாகர், ஆய்வாளர் சோபிதாஸ் உள்ளிட்ட போக்குவ ரத்து போலீசார்பங்கேற்றனர்.சிறுவர்கள் உட்பட, 300க்கும் மேற்பட்டோருக்கு, வேம்பு, கொய்யா, புங்கம், நாவல் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.பின், தேவாலய வளாகத்தில், போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உதவி கமிஷனர், ’ஹெல்மெட்’ அணிவதன் அவசியம் குறித்து விளக்கினார்.விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர்கள் பாலம் இருளப்பன், பெஞ்சமின் மற்றும், 500க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !