ராமநாதபுரம் கம்பன் விழா
ADDED :2255 days ago
ராமநாதபுரம்:கவிக்கோமான் கம்பன் விழாவை முன்னிட்டு கருத்தரங்கம், பட்டிமன்றம் ராம நாதபுரம் அரவிந்த அரங்கத்தில் நடந்தது. தமிழ்ச்சங்க தலைவர் அப்துல்சலாம் தலைமை வகித்தார். கம்பன் கழக ஒருங்கிணைப்பாளர் ரமணி சாஸ்திரி முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கில் ’கம்பனின் அன்பு வண்ணம்’ என்ற தலைப்பில் கம்பன் கழக பொதுச்செயலாளர் மாயழகு, ’கம்பனின் கார்வண்ணம்’ என்ற தலைப்பில் குலசேகரன் பேசினர். ’கம்பனின் சிறப் பிற்கு பெரிதும் காரணமாவது’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. விழாவில் கம்பன் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.