உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தயானந்தபுரி சுவாமி குமாரபாளையம் வருகை

தயானந்தபுரி சுவாமி குமாரபாளையம் வருகை

குமாரபாளையம்: குமாரபாளையத்திற்கு, தயானந்தபுரி சுவாமி வருகை தந்ததால், கோவில் களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தேவாங்க குல குரு தயானந்தபுரி சுவாமி, நேற்று (ஆக., 5ல்) குமாரபாளையம் பழைய பேட்டை சவுண்டம்மன் கோவிலுக்கு வருகை தந்தார்.

அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டதுடன், பக்தர்கள் பாதபூஜை செய்து வரவேற் றனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடத்தப்பட்டது. சுவாமி பேசுகையில், ”பாரம்பரிய நெசவாளர்களின் நலம் காக்கும் தேவாங்கர் சமூக நல மாநாடு கோவை கொடிசியா மைதானத்தில், செப், 21ல் நடக்கிறது. சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவில் நிர்வாகிகள், வீரக் குமாரர்கள் குழுவினர், மகளிர் அமைப்பினர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !