உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தைலத்தில் குளிக்கும் அம்மன்

தைலத்தில் குளிக்கும் அம்மன்

சீர்காழி புதிய பஸ்நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது கோமளாம்பிகை  கோயில். அன்னையின் திருமேனி என்ன மரத்தினால் செய்யப்பட்டது என்ற சொல்ல  இயலாதபடி அமைந்துள்ளது. எனவே, அன்னைக்கு அபிஷேகம் எதுவும் கிடையாது. சாம்பிராணி தைலம் மட்டுமே சாத்தப்படுகிறது. அன்னையின் பாதத்தின் அருகே ஒரு  சூலம் உள்ளது. பூமிக்கு அடியில் 11 அடி ஆழம் புதைக்கப்பட்டுள்ள அந்த சூலம் பூமிக்கு மேல் 2 அடி உயரத்தில் காட்சி தருகிறது. அன்னைக்கு நடைபெற வேண்டிய  அனைத்து அபிஷேகங்களும் இந்த சூலத்திற்கே நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !