உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.15 லட்சம் காணிக்கை

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.15 லட்சம் காணிக்கை

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில், காணிக்கையாக, 15  லட்சம் ரூபாய் இருந்தது.

நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை உண்டியல் திறக்கப் பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்படும். அந்த வகையில், கோவில் வளாக த்தில் இருந்த எட்டுக்கும் மேற்பட்ட உண்டியல்கள் திறக்கப்பட்டு, உதவி ஆணையர்கள் ரமேஷ், தமிழரசு, தக்கார் குமரேசன், ஆய்வாளர் அம்சா ஆகியோர் முன்னிலையில் எண்ணும் பணி மேற்கொள்ளப்பட்டது.

காலை, 10:00 மணிக்கு துவங்கிய பணி, மாலை, 4:00 மணி வரை நடந்தது. இதில், ரொக்கமாக, 15 லட்சத்து, 26 ஆயிரத்து, 939 ரூபாய் இருந்தது. அதேபோல், 11 கிராம் தங்கம் மற்றும் 145 கிராம் வெள்ளி இருந்ததாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். கடந்த ஜூன், 25ல் உண்டியல் திறக்கப்பட்டபோது, எட்டு லட்சத்து, 97 ஆயிரத்து, 990 ரூபாய் காணிக்கை இருந்தது குறிப் பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !