உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் மாரியம்மன் கோவிலில் முதல்முறை தேரோட்டம்

சேலம் மாரியம்மன் கோவிலில் முதல்முறை தேரோட்டம்

சேலம்: செங்குந்தர் மாரியம்மன் கோவிலில், முதல்முறையாக, நாளை  தேரோட்டம் நடக்கவுள்ளது.

சேலம், அம்மாபேட்டை, செங்குந்தர் மாரியம்மன் கோவில் திருத்தேர் திருப்பணி அறக் கட்டளை தலைவர் சிவசண்முகம் அளித்த பேட்டி: அறக்கட்டளை சார்பில் நிதி திரட்டி, 30 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒரே இலுப்பை மரத்தால், 27 அடி உயர தேர் செய்யப்பட்டு, 2017, ஆக., 31ல் வெள்ளோட்டம் நடந்தது.

கடந்தாண்டு ஆக., 31ல், கோவில் கும்பாபிஷேகம் நடந்ததால், முதல்முறையாக, ஆக., 8ல் (நாளை), தேரோட்டம் நடக்கவுள்ளது.  

காலை, 8:15 மணிக்கு, வடம் பிடித்து இழுத்து, பக்தர்கள் தேரோட்டத்தை  தொடங்கிவைப்பர். செங்குந்தர் மாரியம்மன், தேரில் வீதியுலா வந்து, பின்,  நிலையை அடைகிறார். பின், பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இவ்வாறு  அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !