உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் முருகன் கோவிலில் ஆடி மாத சஷ்டி உற்சவம்

மயிலம் முருகன் கோவிலில் ஆடி மாத சஷ்டி உற்சவம்

மயிலம், : மயிலம் முருகன் கோவிலில் ஆடி மாத சஷ்டி உற்சவம்  நடந்தது.மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் கோவிலில், ஆடி சஷ்டியை  முன்னிட்டு நேற்று (ஆக., 6ல்) அதிகாலை 6:00 மணிக்கு சஷ்டி வழிபாடு நடந்தது.

காலை 11:00 மணிக்கு பாலசித்தர், விநாயகர் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர்  சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது.மதியம் 12:00 மணிக்கு சுவாமிக்கு மகா  தீபாராதனை நடந்தது. பின்னர் மூலவர் தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு  அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து  வழிபட்டனர். இரவு 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சுவாமி கிரிவலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !