கள்ளக்குறிச்சி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சண்டியாகம்
ADDED :2303 days ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கடைவீதியில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் 5ம் ஆண்டு சண்டியாகம் நடந்தது.
மக்கள் நலம் பெறவும்; மழை வேண்டியும் கள்ளக்குறிச்சி வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஸ்ரீவித்யா நவாவரண மங்கள சண்டியாகம் மூன்று நாட்கள் நடந்தது.
அதனையொட்டி, கடந்த நேற்று முன்தினம் 5ம் தேதி காலை கணபதி வழிபாட்டுடன் சண்டியாகம் துவங்கியது.நேற்று 6ம் தேதி காலை மற்றும் மாலையில் வேதிகா அர்ச்சனை, சப்தசதி பாராயணம், 786 மந்திரங்கள் கொண்ட தேவி மகாத்மியத்தை 13 அத்தியாயங்களாக பிரித்து சண்டியாகம் நடத்தினர்.