மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு அய்யனார் கோவிலில் ஆடி திருவிழா
ADDED :2257 days ago
மயிலம் : மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு அய்யனார் கோவிலில் ஆடி உற்சவ திருவிழா நேற்று (ஆக., 6ல்) நடந்தது.
அதனையொட்டி, நேற்று (ஆக., 6ல்) காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அருகில் உள்ள ஏரிக்கரையில் இருந்து பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட பூங்கரக த்தை முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்தனர்.
மாலை 4:00 மணிக்கு பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கலிட்டனர். மாலை 6:00 மணிக்கு பால், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களினால் அய்யனாரப்பனுக்கு அபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.