உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் வீட்டுக்கொரு விநாயகர் சிலை

மதுரையில் வீட்டுக்கொரு விநாயகர் சிலை

மதுரை:மதுரையில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீட்டுக் கொரு விநாயகர் சிலை வழங்க ஏற்பாடு நடக்கிறது.


விநாயகர் சதுர்த்தி விழா செப்.,2 நடக்கிறது. ஹிந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் செப்.,3ல் விளக்குத்துாணில் துவங்கி மாசி வீதிகள் வழியாக சென்று வைகையில் கரைக்கப்படும். மாட்டுத்தாவணி - சர்வேயர் காலனி ரோட்டில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 11 குடும்பத்தினர் விநாயகர் சிலைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.சிற்பி மீனா கூறியதாவது: ஆர்டரின் பேரில் விநாயகர் சிலைகளை தயாரிக்கிறோம். ஒன்று முதல் 9 அடி வரை விதவிதமான சிலைகளை வடிவமைத்து குறைந்த விலைக்கு விற்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வாங்கி செல்கின்றனர். நவராத்திரி விழா, கோயில் கட்டுமானத் துக்காக சிலைகளை வாங்கி செல்கின்றனர்.

கேரளா போன்ற மாநிலங்களிலிருந்தும் வந்து சிலைகளை வாங்குகின்றனர் என்றார்.சிற்பி வரதன் கூறியதாவது: ஊட்டி, கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிலை களுக்கான ஆர்டர் கிடைத்துள்ளது. துாத்துக்குடி உப்பளங்களில் இருந்து பெறப்படும் ஜிப்சம் என்ற மூலப்பொருளால் சிலைகளை இயற்கை முறையில் தயாரிக்கிறோம். இதனால் தண்ணீ ரில் சிலை கரைவது எளிது. மூலிகை வர்ணம் மட்டுமே சிலைகளுக்கு பயன்படுத்து வதால் ஆற்று நீர் மாசடையாது. ஆர்டரின் பேரில் தயாரிப்பதால் சிலைகள் உடனுக்குடன் எடுத்து சென்று விடுகின்றனர். சிலைகள் தேவைக்கு அலைபேசி 98940 86504 ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகி சோலை கண்ணன் கூறியதாவது: கடந்தாண்டு வீதிக்கு ஒரு விநாயகர் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்தாண்டு வீட்டுக் கொரு விநாயகர் சிலை வழங்கவுள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !