உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் புஷ்பயாகம்

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் புஷ்பயாகம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா உற்ஸவங்கள் புஷ்பயாகத்துடன் நிறைவு பெற்றது.

ஜூலை 27ல் கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம்  ஆக.4 ல் நடந்தது.  திருவிழாவின் நிறைவுநாளை முன்னிட்டு, நேற்று மாலை 6:00 மணிக்கு வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். அங்கு பல்வேறு வகை பூக்களால், கோலமிடப்பட்டு புஷ்பயாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.விழாவில் தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். புஷ்பயாக விழாவுடன் ஆண்டாள் ஆடிப்பூர உற்ஸவங்கள் நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !