தேவகோட்டை மாரியம்மன் கோயில் பால்குட விழா
ADDED :2259 days ago
தேவகோட்டை:தேவகோட்டை அருணகிரிபட்டினம் முத்துமாரியம்மன் கோயில் ஆடிச் செவ்வாய் உற்ஸவம் கடந்த 30ந் தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது.
ஏழாம் நாள் பக்தர்கள் பூத்தட்டு எடுத்து வந்து பூச்சொரிதல் செய்து வழிபட்டனர்.எட்டாம் நாள் சக்தி கரகம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக சன்னதியை அடைந்து சிறப்பு பூஜை நடந்தன. நேற்று (ஆக., 6ல்) ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பால்குடம், அக்னிச்சட்டி, பறவை காவடி எடுத்து வந்து பூக்குழி இறங்கினர். பாலாபிஷேகத்தை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.