உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோயில்களில் கொடியேற்றம்: தாடிக்கொம்பு, வடமதுரையில் திரண்ட பக்தர்கள்

பெருமாள் கோயில்களில் கொடியேற்றம்: தாடிக்கொம்பு, வடமதுரையில் திரண்ட பக்தர்கள்

திண்டுக்கல்: தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் ஆடிப்பெருந்திருவிழா கொடியே ற்றத்துடன் நேற்று (ஆக., 7ல்) துவங்கியது.

திருவிழாவையொட்டி கொடியேற்றம் காலை 10:30 மணிக்கு நடந்தது. இதையொட்டி சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. இரவில் சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் பத்து நாட்களும் அன்ன வாகனம், கேடயம், கருட, சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. ஆக.13 ல் மாலை 6:30 முதல் 7:30 மணிக்குள் திருக்கல்யாணம், ஆக.15 ல் மாலை 4:00 மணிக்கு தேரோட்டம், ஆக.17 ல் மாலை 6:00 மணிக்கு தெப்ப உற்ஸவம் நடக்கிறது.

வடமதுரை:   வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில், நேற்று (ஆக., 7ல்) காலை மண்டகபடிதாரர் சரவணமூர்த்தி மற்றும் உடையாம்பட்டி கிராம மக்கள் நான்கு ரத வீதிகள் வழியே ஊர்வலம்

வந்து கொடியை கோயிலுக்குள் கொண்டு வந்தனர். கொடிமரம் முன்பாக ஸ்ரீதேவி, பூமா தேவியுடன் சவுந்தரராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். சிறப்பு பூஜை
கள் முடிந்ததும் காலை 10:50 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.

பதின்மூன்று நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் வாகனங்களில் சுவாமி புறப் பாடும் நடைபெறும். ஆக.13ல் திருக்கல்யாணம், ஆக.15ல் தேரோட்டம், ஆக.17–ல் வசந்தம் முத்துப்பல்லக்கு வைபவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !