அழகர்மலை முருகன் கோயிலில் சஷ்டி விழா
ADDED :2411 days ago
அலங்காநல்லுார்: அழகர்மலை சோலைமலை முருகன் கோயிலில் ஆடி சஷ்டி விழா நடந்தது. அங்குள்ள சஷ்டி மண்டபத்தில் உற்ஸவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகை அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. மூலவர், வித்தக விநா யகர் மற்றும் ஆதிவேல் சன்னதியிலும் விசேஷ பூஜைகள்நடந்தன. ஏராளமான பக்தர்கள் நெய் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.அலங்காநல்லுார் ஐயப்பன் கோயில் பாலமுருகன் சன்னதி யிலும் சஷ்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.