உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை மயிலையில் பன்னிரு திருமுறை விழா

சென்னை மயிலையில் பன்னிரு திருமுறை விழா

சென்னை:மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பன்னிரு திருமுறை மற்றும் தெய்வ சேக்கிழார் விழா, சிறப்பாக துவங்கி உள்ளது.

மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், 6ம் தேதி, பன்னிரு திருமுறை மற்றும் தெய்வச் சேக் கிழார் விழா துவங்கியது. 17ம் தேதி வரை நடக்கும் இவ்விழாவில், ஒவ்வொரு நாளும் மாலை, 5:00 மணிக்கு, திருமுறை விண்ணப்பமும், மாலை, 7:00 மணி முதல், சொற்பொழிவும் நடக் கிறது.

நிகழ்ச்சியில், ஞானசுந்தரம், நடராஜன், பிரபாகரமூர்த்தி, தியாகராஜன், மதன்முரளி, ராஜ கோபாலன், சிவகுமார், சுந்தரம், ரமணன், சாரதாநம்பி ஆரூரன், அரங்க.ராமலிங்கம் ஆகியோ ரின் சொற்பொழிவு நடக்கிறது.

திருஞானசம்பந்தம், சாமிநாத தேசிகர், முத்துக்குமரன், சாமிநாதன் உள்ளிட்டோரின், திரு முறை இன்னிசை, தினமும் நடக்கிறது. 18ம் தேதி, அம்பலவாணர் சன்னிதியில், திருமுறை கண்டருளும் விழா உடன், யானை வாகனத்தில், வீதியுலா நடக்க உள்ளது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கபாலீஸ்வரர் திருமுறை அபிஷேக வழிபாட்டுக் குழுவுடன், இணை ஆணை யர், காவேரி, தக்கார், விஜயகுமார் ரெட்டி ஆகியோர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !