திருவேடகம் விஷ்ணு துர்க்கை அம்மன் கோயில் முளைப்பாரி உற்ஸவம்
ADDED :2260 days ago
சோழவந்தான்: திருவேடகம் விஷ்ணு துர்க்கை அம்மன் கோயில் ஆடி முளைப்பாரி உற்ஸவம் ஜூலை 29 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடந்தன. பால்குடம், மாவிளக்கு எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைப்பாரி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். நேற்று (ஆக., 8ல்)சுவாமி, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.