உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் வனநாதஸ்வரர் கோவிலில் சுந்தரர் குரு பூஜை விழா

கரூர் வனநாதஸ்வரர் கோவிலில் சுந்தரர் குரு பூஜை விழா

கரூர்: ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தையொட்டி, சுந்தரர் குரு பூஜையில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். க.பரமத்தி அருகில், புன்னை வனநாதஸ்வரர் கோவிலில் சம்பந்தர், திருநாவுக்கரசு, சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நாயன்மார்களுக்கு சிலைகளை வைத்து, முன்னோர்களால் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

இதில், ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று, சுந்தரருக்கு குரு பூஜை விழா நடந்தது. சுந்தரருக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், கரும்புச்சாறு போன்ற, 18 வகை மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !