உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா

மயிலம் மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா

மயிலம்: மயிலம் மாரியம்மன் கோவிலில் நேற்று (ஆக., 8ல்) ஆடி திருவிழா  நடந்தது.மயிலம் மலையடிவாரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் மயிலம்  தமிழ் கல்லுாரியினர் சார்பில் நடந்த உற்சவத்தையொட்டி காலை 6:00 மணிக்கு  சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பின்னர் குளக்கரையிலிருந்து மாணவர்கள் பூங்கரகத்தை முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்தனர்.தொடர்ந்து, கல்லுாரி வளாகத்தில் இருந்து அம்மன் வீதியுலா துவங்கியது. மாலை 6:30 மணிக்கு பால், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட பொருட்களினால் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.

பின்னர் மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய  சுவாமிகள், கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு மற்றும் உதவி பேராசிரியர்கள்  மகா தீபாராதனையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து  உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களு க்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் தமிழ்க் கல்லுாரியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !