உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆர்.கே.பேட்டை 3 கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு உற்ஸவம்

ஆர்.கே.பேட்டை 3 கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு உற்ஸவம்

ஆர்.கே.பேட்டை:ஆடி மாதத்தில், அம்மனுக்கு சிறப்பு உற்சவம்,  அம்மையார்குப்பத்தில் இன்றும் (ஆக., 10ல்), வங்கனுாரில், நாளை மறுதினமும் (ஆக., 11ல்)  துவங்குகிறது.

ஒரே நாளில், மூன்று கோவில்களில், உற்சவம் நடைபெற உள்ளதால், வரும்  திங்கட்கிழமை, கிராமம் முழுவதும் வேப்பிலை வாசம் வெளுத்து வாங்கும்  என்பது நிச்சயம்.

மஞ்சள் அபிஷேகம்அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், உற்சவங்கள், இன்று (ஆக., 8ல்) முதல், ஆர்.கே.பேட்டை வட்டாரத்தில் களை கட்ட துவங்குகின்றன.

ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம், காமாட்சியம்மன் கோவிலில், மூலவர் அம்மனு க்கு பாலாபிஷேகம் நடக்கிறது. இதற்கான பால்குடங்களை, பக்தர்கள், சாது சங்கர மடத்தில் இருந்து, ஊர்லவமாக சுமந்து வர உள்ளனர். நாளை மறுதினம் (ஆக., 11ல்), வங்கனுார், பெரிய பாளையத்தம்மன் கோவிலில்  சிறப்பு உற்சவம் நடக்கிறது. 108 மஞ்சள் நீர் குடங்கள் அபிஷே கம் நடத்தப்பட  உள்ளது.

மேலும், திங்கட்கிழமை, வங்கனுாரில் அமைந்துள்ள அன்னியம்மன்  கோவில், பச்சையம் மன் கோவில், எல்லம்மன் கோவில் ஆகிய மூன்று  கோவில்களிலும் ஆடி பொங்கல் வைக்கப் படுகிறது. அம்மனை குலதெய்வமாக  வழிபடும் பக்தர்கள், இந்த விழாவை, சிறப்பாக கொண்டாட உள்ளனர். தண்ணீர்  பஞ்சம்ஒரே நாளில், மூன்று அம்மன் கோவில்களில், திரு விழா நடைபெற  உள்ளதால், கிராமம் முழுவதும் வேப்பிலை தோரணத்தால் அலங்கரிக் கப்பட  உள்ளது.ஆடி மாத கொண்டாட்டம் துவங்கியுள்ள அம்மையார்குப்பம் மற்றும்  வங்கனுார் ஆகிய இரண்டு கிராமங்களும், கோடையில், தண்ணீர் பஞ்சத்தால்  பாதிக்கப் பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சம் தீர வேண்டும் என்பதே  பக்தர்களின் வேண்டு தலாக இருக்கும் என, நம்பப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !