கும்மிடிப்பூண்டி வரமூர்த்தீஸ்வரர் கோவில் குளம் பராமரிக்க எதிர்பார்ப்பு
ADDED :2589 days ago
கும்மிடிப்பூண்டி:வரமூர்த்தீஸ்வரர் கோவில் குளத்தை பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
கவரைப்பேட்டை அருகே, அரியத்துறை கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க வரமூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த கோவிலின் அருகே, பரந்து விரிந்துக் காணப்படும் குளம் ஒன்று உள்ளது. அதில், பக்தர்கள் நீராடி, வரமூர்த்தீஸ்வரரை வழிபடுவது வழக்கம்.அந்த குளத்தின் ஒரு பகுதியில், படிகற்கள் பெயர்ந்துள்ளன. ஓரிடத்தில், குளத்திற்குள் மண் சரிந்து மண்டிக் கிடக் கிறது. அழகான கோவில் குளம் சீரழிவதைக் கண்டு, பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர். குளத்தை சுற்றி மதில் சுவர் அமைத்து, குளத்தை சீர் செய்து முறையாக பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.