திருவதிகை கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிப்பு
ADDED :2359 days ago
பண்ருட்டி: திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் உற்சவர் தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை ரங்கநாயகி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில் ஆடி மாதம் 4ம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு உற்சவர் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு உற்சவர் தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.