உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி தேசம்மன் கோவிலில் ஆடி மாத உற்சவம்

திருத்தணி தேசம்மன் கோவிலில் ஆடி மாத உற்சவம்

திருத்தணி:தேசம்மன் கோவிலில், ஆடி மாத உற்சவத்தையொட்டி, பெண்கள்  பொங்கல் வைத்து வழிபட்டனர்.

திருத்தணி ஒன்றியம், ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள தேசம்மன்  கோவிலில், ஆடி மாதம், ஞாயிற்றுக்கிழமையையொட்டி, மூலவருக்கு சிறப்பு  அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.அதை தொடர்ந்து, கூழ்  வார்த்தல் நிகழ்ச்சியும், கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும்  நடந்தது.

இதில், திரளான பெண்கள், சர்க்கரை பொங்கலை அம்மனுக்கு படைத்து  வழிபட்டனர். மாலை யில் மூலவருக்கு, சிறப்பு மலர் அலங்காரம் மற்றும்  தீபாராதனை நடந்தது.இதில், ராமகிரு ஷ்ணாபுரம், சாமந்திபுரம் பங்களா மற்றும்  அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !