காரியாபட்டி: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் 11வது ஆண்டு விழா மற்றும் மழை வேண்டி ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு விழா நடந்தது.மாவட்ட நிர்வாக குழு தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். இணை செயலாளர் அருள்பிரகாஷ் முன்னிலை வகித்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் பழனிசக்தி கொடி ஏற்றி துவக்கி வைத்தார்.அருப்புக்கோட்டை வட்டத் தலைவர் குமார், கஞ்சி கலய ஊர்வலத்தை துவக்கி வைத்தார். முக்கிய வீதி வழியாக ஏராளமான பக்தர்கள் கலயத்தை சுமந்து சென்றனர். மாவட்ட இணைச் செயலாளர் சீதாபதி, முதியோர்களுக்கு ஆடைகள் தானமாக வழங்கினார்.அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் பேரூராட்சி தலைவர் காந்திமதி, வழிபாட்டு மன்ற மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.